அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு ;பிரதமர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஒவ்வொரு இந்தியருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் கரோனாவை சமாளிக்க சமூகவிலகல்தான் ஒரே தீர்வு கரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்க கூடாது , கரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் , கரோனாவை விளையாட்டாக நினைக்காதீர்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறது
நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு. பிரதமர் மோடி அறிவிப்பு.. இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது
ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் , எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வேண்டுகோள்
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது ஒவ்வொரு மாநிலமும் , ஒவ்வொரு நகரமும் , ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படுகிறது உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் மக்கள் ஊரடங்கை விட இந்த ஊரடங்கு கடுமையாக இருக்கும் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கும் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம் கரோனாவை கட்டுப்படுத்துவது மிக கடினம்
Tags: முக்கிய அறிவிப்பு