Breaking News

மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி: முழு விவரம்

அட்மின் மீடியா
1
அகில இந்திய வானொலியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி



கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கை தவிர வேறு வழியில்லை: வாழ்வா, சாவா என்ற போராட்டமாக உள்ளது

கொரோனா தடுப்பு குறித்து கடுமையான முடிவுகள் ஏழை மக்களை பாதிக்கும் என்பதை உணர்கிறேன், ஆனால் கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கை தவிர வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்தார். 

வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை  கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது கடுமையான முடிவுகள் ஏழை மக்கள் பாதிப்படைந்து உள்ளனர் என்பதை உணருகிறேன் மேலும் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என கூறிய மோடி அவர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில், மக்களுக்காக சேவை செய்பவர்கள் ஹீரோக்கள் என புகழ்ந்தார்


ஆனால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டைக் காக்க இது போன்ற கடும் கட்டுப்பாடுகள் அவசியம் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியமானது

21 நாட்கள் முழு ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் பலருக்கும் குறிப்பாக ஏழைகளின் வாழ்வில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை நான் அறிவேன்

லாக்டவுன் விதிகளை மீற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் யாரும் செயல்படவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறதுலாக்டவுனை முறையாக நாம்பின்பற்றாமல் போனால் கொரோனாவிடமிருந்து நம்மை பாதுகாப்பது கடினம்நான் எடுத்த இந்த கடினமான முடிவால் சிரமத்திற்குள்ளான மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன் என உரையாற்றினார்


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. சரிடா அதுக்காக பிச்சை எடுக்கிற எங்கள்ட்ட ஏன் நிதி கேக்கு

    ReplyDelete