8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஜாக்பாட் தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு முழு விவரம் இதோ
8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஜாக்பாட் தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு முழு விவரம் இதோ
பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்
பதவியின் பெயர்:- அலுவலக உதவியாளர்,
கல்வி தகுதி:- 8-ஆம் வகுப்பு தேர்ச்சி.
இட ஒதுக்கீடு: பொதுப்பிரிவு: கொரானோ தொற்றினாலோ, இதர காரணங்களாலோ, பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் (மகன்/மகள்) (அரசாணை (நிலை) எண்.8, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்த (ஆர்) துறை, நாள்: 10.01.2020-ல் தந்தையையும் தாயையும் இழந்த வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை இவ்வினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது). முன்னுரிமை அளிக்கப்படும்.
01/07/2025 ல் வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும், அதிகபட்ச வயது 32 ஆகும், மேலும் அதிகபட்ச வயது வரம்பு தளர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016ன் படி இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, பதிவு தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கென குறிப்பிட்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும். புகைப்படத்தின் மேல்புறம் சுய சான்றொப்பமிடவேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தில் பின் அடித்து இணைக்கக் கூடாது.
உரிய முறையில் சுய சான்றொப்பமிட தேவையான சான்றாவனங்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது.
முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுயவிலாசமிட்ட ரூ.50/- க்கான அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட உறையுடன் இவ்வலுவலகத்திற்கு பதிவுத் தபால் மூலமாக 11.07.2025 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கத்தக்க அளவில் கீழேகண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 11.07.2025 அன்று மாலை 5.45 மணிக்குமேல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நேர்காணல் மூலமாக மேற்கண்ட காலியிடம் நிரப்பப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:-
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
2வது தெரு, கணபதிநகர், எனம்பலூர் ரோடு,
பெரம்பலூர்-621 212
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பத்தரார்களின் அடையான மற்றும் இருப்பிட சான்றுக்காக கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் புகைப்பட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். (கல்வி தகுதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை)
பின் குறிப்பு நேர்காணல் தேதியும், மணியும் தங்களுக்கு தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2025/06/2025061916.pdf
Tags: வேலைவாய்ப்பு