பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டின் முன்பகுதியில், மற்றவர்கள் அறியும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் அவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கொரோனா அறிகுறி இருந்தும் அதனை அரசுக்கு தெரிவிக்காமல் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசின் உத்தரவுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்
Tags: முக்கிய அறிவிப்பு