ரோட்டில் குப்பைகளை எரித்தால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் மாநகராட்சி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஈரோட்டில் குப்பைகளை எந்த இடத்திலும் எரிக்க கூடாது. மீறினால் 500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
வீடுகள், கடைகளில் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகளை சேகரிக்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு குப்பைகளை தரம் பிரிக்காமல் ஒப்படைத்தால் 200 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும்
குப்பைகளை பொது இடங்கள், வடிகால், தெருக்களில் கொட்டக்கூடாது. குப்பைகளை எந்த இடத்திலும் எரிக்க கூடாது. மீறினால் 500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் அறிவித்துள்ளார்
Tags: முக்கிய அறிவிப்பு