கொரோனா வைரஸ் தொற்று நோய் 'பேரிடர்' என அறிவிப்பு: உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு; மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
சீனாவில் தொடங்கி உலகமெங்கும் பரவி பலரை பலி வாங்கிய கொரானா வைரஸ் தற்போது இந்தியாவில் பல மாநிலங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது
இந்நிலையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை பேரிடராகக் கருத வேண்டும். இந்த நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தத் தேவைப்படும் நிதியை மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 85 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். என அறிவித்துள்ளது
Tags: முக்கிய அறிவிப்பு