குடியாத்தம் பகுதியில் கொரானா என வதந்தி பரப்பிய 3 பேர் கைது
அட்மின் மீடியா
0
குடியாத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 2 இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரண்டு இளைஞர்களின் படத்தை வைத்து தொலைக்காட்சியில் செய்தி வருவதைப் போல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது
இதுதொடர்பாக, அந்த வீடியோவில் உள்ள 2 இளைஞர்களும் குடியாத்தம் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
அந்த புகார் மீது காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொரோனா வைரஸ் பற்றி வதந்தி பரப்பியது குடியாத்தம் பகுதியை சேர்ந்த சிவகுமார், சுகுமார், விஜயன் ஆகிய 3 பேர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அந்த 3 இளைஞர்களையும் கைது செய்த போலீசார், வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags: முக்கிய அறிவிப்பு