வாரசந்தை மற்றும் பெரிய கடைகளை 31 ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பெரிய ஜவுளி, நகைக்கடைகள், பெரிய கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒரு நாளைக்கு மூன்று முறை கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பெரிய வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் AC வசதி கொண்ட பெரிய ஜவுளி, நகைக்கடைகள், பெரிய கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
வாரச்சந்தைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்கள் சுத்தத்தை கடைபிடிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
முடிந்தவரை ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற முயற்சி மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், காய், கனி கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் வழக்கம் போல் திறந்திருக்கும் எனவும் அறிவிப்பு
Tags: முக்கிய அறிவிப்பு