Breaking News

இளம் வழக்கறிஞர்களுக்கு 3000 ரூபாய் உதவி தொகை: அமைச்சர் சி.வி சண்முகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை  2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு

மேலும் வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும்.

ஆந்திரா, கேரளா, கோவா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்படிப்பு முடித்து, முறைப்படி வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள் தொழில் செய்வதற்கு வசதியாக அந்தந்த மாநில அரசுகள் உதவி தொகை வழங்குகிறது. 

அதே போல், தமிழக அரசும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும். 5 வருடத்துக்கு இந்த தொகை வழங்கப்பட வேண்டும். அப்போது சட்டப்படிப்பு முடிக்கும் வக்கீல் ெதாழிலில் காலூன்ற முடியும். என தமிழக அரசிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback