இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியதில்லை ஏனெனில், இனி பத்திர பதிவு செய்த உடன் தானாகவே பட்டா மாறுதல் ஆகும் புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்து உத்தரவிட்டுள்ளது. 

சொத்து சம்மந்தமாக சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரபதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவு முடிந்த உடன் பத்திரப்பதிவு செய்தவர்கள் தங்கள் பெயரில் பட்டா  பெயர் மாற்றுவதற்கு விண்ணப்பித்து அங்கு நீண்ட ஆய்வுக்கு பின்னே பட்டா மாறுதல் கிடைக்கும். 

தற்போதைய இந்நிலையில் உடனடியாக பட்டா மாறுதல் கிடைப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஏனெனில் சர்வே எண்ணை சரி பார்க்க வேண்டும், மூல ஆவணம் பார்க்க வேண்டும். குறிப்பாக, ஒரே சர்வே எண்ணில் பல உட்பிரிவு இனங்கள் இருக்கும் பட்சத்தில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என காரணங்கள் உள்ளது. இப்படி பல காரணங்கள் இருப்பதால் பட்டா மாறுதல் செய்து தராமல் தாலுகா அலுவலகத்தில் பெரும் தாமதம் ஏற்படுகிறது. 

இது தொடர்பாக இன்று வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, இனி வருங்காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டும்.என அறிவித்துள்ளார். சார்பதிவாளர்கள் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் ஆகி விடும். இதன் மூலம் பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியம் இனி ஏற்படாது. இந்த திட்டத்தால் மக்களுக்கு பட்டா மாறுதலுக்கு அலைச்சல் குறையும்.
Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours