சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டம்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்று மாலை முதல்  போராட்டம் நடத்தி வந்தனர். இந்த தர்ணா போராட்டத்தில் பெண்கள் என சுமார் 5000 த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அவர்களை கலைந்து போகுமாறு காவல்துறையினர் எச்சரித்தனர். அப்போது  காவல்துறையினர், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளார்கள். மேலும் பலரை கைதுசெய்து அழைத்துச் சென்றனர். 

அவர்களை விடுதலை செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை தொடருவோம் என்று பிற போராட்டக்காரர்கள் வண்ணாரப்பேட்டை பகுதியில் அமர்ந்து விட்டனர்.

இந்த தடியடி சம்பவம் கேள்விபட்ட  இஸ்லாமிய அமைப்பினர் 
தமிழகம் முழுவதும் 
ஆங்காங்கு இரவோடு இரவாக போராட்டம் நடத்தி வருகின்றார்கள்

Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours