தமிழகத்தில் பத்திரபதிவு அலுவலகங்களில் வீடு விளைநிலம் உள்ளிட்ட சொத்துப் பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகின்றன!

இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் பெறப்படுகின்றன! ஆனால் இதுநாள் வரை சாட்சிகளிடம் புகைப்படம் கைரேகை பதிவு பெறப்படாமல், அவர்களிடமிருந்து கையெழுத்து மட்டுமே பெறப்பட்டு வந்தது.


பத்திரபதிவு செய்ய  இன்று முதல் ஒரே நபர் சாட்சியாக ஆறு ஆவணங்களில் மட்டுமே சேர்க்க முடியும்! ஆறு ஆவணங்களுக்கு மேல் ஒரே நபர் சாட்சியாக வந்தால் மாவட்ட பதிவாளர் ஐடிக்கு அனுப்பப்படும். அவர் அனுமதி அளித்தால் மட்டுமே ஆவணப்பதிவு தொடரமுடியும். மேலும் ஆவணத்தில் சாட்சியாக வருபவர்களின்  புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயம் பெறப்படவேண்டும் என  புதிய கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது


Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment:

0 comments so far,add yours