முஸ்லீம்களுக்கு ஒன்று என்றால் முதலில் நான் நிற்பேன் என்று சொன்ன ரஜினி: டிவிட்டரில் டிரெண்ட் ஆன வீதிக்கு வாங்க ரஜினி
அட்மின் மீடியா
0
சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்குதலை அடுத்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சென்னை ஷாஹீன் பாக், வீதிக்கு வாங்க ரஜினி டிரெண்டிங்கில் உள்ளது
சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதி வழியில் நடைபெற்ற்ச் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலை நடத்தியது
சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.
மேலும் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் சென்னை போராட்டம் முன்னணியில் உள்ளது.
குறிப்பாக ரஜினி சிஏஏவை ஆதரித்து பேசும்போது, முஸ்லிம்களுக்கு ஒன்று என்றால் முதலில் நான் நிற்பேன் என்றார்.
போலீஸ் தாக்குதலில் முஸ்லிம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ரஜினியிடமிருந்து ஒரு கண்டனக் குரல் கூட வரவில்லை.
இந்நிலையில் ட்விட்டரில் ‘வீதிக்கு வாங்க ரஜினி’, ‘சென்னை ஷஹீன் பாக்’ ஆகியவை முன்னணியில் உள்ளன.
Tags: முக்கிய செய்தி