டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்ட கலவரத்தில் 5 பேர் பலி:
அட்மின் மீடியா
0
குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு...
இன்று டெல்லி யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
இதனையடுத்து, வடக்கு மற்றும் தெற்கு டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
வன்முறை போராட்டத்தின் போது காயமடைந்த 120 க்கும் மேற்பட்டோர் குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கலவரத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளார்கள் என அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கின்றன
இந்நிலையில் டெல்லியில் உள்ள 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே டெல்லி வன்முறை சம்பவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட மத்திய உள்துறை செயலாளரான அஜய் குமார் பல்லா, ''தற்போது மூத்த அதிகாரிகள் களத்தில் உள்ளனர். போதுமான அளவில் பாதுகாப்பு படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.
ஜாஃபராபாத் வன்முறை சம்பவத்தில் காயமடைந்த 120க்கும் மேற்பட்டவர்கள் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜிடிபி மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags: முக்கிய அறிவிப்பு