Breaking News

3 வது நாளாக இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் விவரம்

அட்மின் மீடியா
0
சி.ஏ.ஏ. வுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீதான போலீஸ் தாக்குதலைக் கண்டித்தும் குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியறுத்தியும்  இன்று 16.02.2020  3-வது நாளாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன.



குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கண்டண பேரணி நடைபெற்றது

அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்திலும் கண்டண பேரணி நடைபெற்றது

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கண்டனப் பேரணி நடத்தினர். 

மேலும்  வேலூர் அண்ணா சாலையில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பொதுமக்கள் பேரணி நடத்தி வருகிறது.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 3-வது நாளாக  போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதே போல் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 2 வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது

 அதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் கண்டண பேரணி நடைபெற்றது

 அதே போல் திண்டுக்கல் மாவட்டம் பெரியகுளத்தில் 4வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback