Breaking News

CAA வுக்கு எதிரான தீர்மானம் மேற்கு வங்க சட்டசபையிலும் நிறைவேற்றம்!

அட்மின் மீடியா
0
மேற்கு வங்க சட்டசபையில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 


மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி இம்மசோதாவை இன்று பிற்பகல் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. 

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றும் 4-வது மாநிலம் மேற்கு வங்கம் ஆகும் இதற்கு முன்னதாக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டசபையிலும் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback