காப்பான் பட பாணியில் பயிற்களை நாசபடுத்தும் வெட்டுக்கிளி
அட்மின் மீடியா
0
குஜராத், ராஜஸ்தானில் வெட்டுக்கிளி படையெடுப்பால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசமாகி உள்ளன. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த மத்திய அரசு சார்பில் 11 குழுக்கள் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த குழுக்கள் வெட்டுக்கிளி பற்றி தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த காப்பான் திரைப்படத்தில் வெட்டுக்கிளிகள் விவசாய நிலங்களை சூறையாடி அழிக்கும் காட்சி ரசிகர்களை மிரள வைக்கும். கம்யூட்டர் கிராபிக்ஸ் என்பதே தெரியாத வகையில் மிக பிரம்மாணமாக எடுக்கப்பட்டிருந்த அந்த காட்சிகள் பார்த்து பார்வையாளர்கள் வியந்தனர். அதுபோல குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பயிர்களையும் தோட்டங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழித்து வருகின்றன.

ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் மாதங்களில் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் கூட்டமாக பறந்து வந்து பயிர்களை நாசப்படுத்துவது வழக்கம்.
அவை நாளொன்றுக்கு 150 முதல் 200 கி.மீ. வரை பறக்கின்றன. தற்போது பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களை சூறையாடி வருகின்றன.
இதனை எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் வேளான் அதிகாரிகளும் வல்லுனர்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர் இதனால் குஜராத்தையும் கடந்து பிற மாநிலங்களுக்கும் இந்த வெட்டுக்கிளி கூட்டம் படையெடுக்குமோ என அச்சம் ஏற்பட்டு இருக்கிறது.
Tags: முக்கிய செய்தி