Breaking News

மசூதியில் இந்து திருமணத்தை நடத்த அனுமதி வழங்கிய முஸ்லிம்கள்!

அட்மின் மீடியா
0
கேரள மாநிலம் காயங்குளம் நகரில் உள்ள செருவாலியில் இஸ்லாமியர்களின் பழங்கால மசூதி உள்ளது. 
அந்த மசூதி அருகில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பிந்து என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர்  மாரடைப்பால் இறந்து விட்டார்.

இந்நிலையில்,  பிந்துவின் மகள் அஞ்சுவிற்கு அந்த பகுதியில் உள்ள சரத் சசி என்பவருடன் வரும் ஜனவரி 19 -ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

ஏழ்மையின் காரணமாக  திருமண செலவுகளை  பிந்துவால் சமாளிக்க முடியாத நிலை

இதனால், அவர் அவரது  மகளின் திருமண உதவி குறித்து அந்த பகுதி இஸ்லாமியர்களிடம் பிந்து கேட்டிருக்கிறார்.  

பிந்து குடும்பத்திற்க்கு அந்த மசூதி அறக்கட்டளையின் செயலாளர்  தொழுகைக்கு வந்தவர்களிடன் முன்வைத்துள்ளார். 

பிந்துவின் நிலைமை கருதி  அனைவரும் மசூதி வளாகத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கினர்.

  இதனையடுத்து வரும் ஜனவரி 19 -ம்தேதி  அந்த மசூதியின் வளாகத்தில் கூடாரம் அமைத்து இந்து மணமக்களின் திருமணம் நடைபெற உள்ளது.

தற்போது நாடு முழுவதிலும் மத நல்லிணக்கம்  சூழல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை அவை தடுத்து நிறுத்தும் என நம்புகிறோம் என அம்மசூதி ஜமாத்தின் செயலாளரான அலூமூத் கூறியுள்ளார்.

Share this