பாதி விலையில் டிக்கெட்: மெட்ரோ ரயில் பொங்கல் ஆபர்
அட்மின் மீடியா
0
மூன்று நாட்களுக்கு மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15,16,17 ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் பயணக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொங்கல் பண்டிகையான வரும் 15 ம் தேதி முதல் 17ம் தேதி வரை இச்சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை செல்ல வரும் பயணிகளுக்கு ஏதுவாக அரசினர் தோட்டம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மெரினாவிற்கு பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது