Breaking News

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் தாக்கல்: 751 ஐரோப்பிய எம்.பி.க்களில் 626 பேர் தீர்மானத்திற்கு ஆதரவு

அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்தச் சட்டமானது பாரபட்சமானது என்றும் ஆபத்தானது என்றும் பலரை அகதிகளாக்கும் திட்டம் என்றும்  ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது மேலும் அதனை எதிர்த்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது


 ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள 751 எம்.பி.க்களில் 560 பேரால் இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இது சட்டவிரோதமானது எனவும், உலக அளவில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் அவர்கள் விமர்சித்திருந்தனர். இந்த நிலையில், 626 எம்.பி.க்கள் அடங்கிய 5 குழுக்கள் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர். 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடும் மக்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக இந்திய அரசும், பாதுகாப்பு படையினரும் மக்களை மிரட்டி வருவதாகவும் தீர்மானத்தில் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது. போராட்டங்களின் போது மனித உரிமை மீறல் நடந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று அதிகாலை ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் பெரும்பாலான எம்பிக்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். 

மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அட்மின் மீடியா ஆப் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்


https://play.google.com/store/apps/details?id=com.adminmedia.app&hl=en


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback