மதம் குறித்து அவமதித்தால் 5 ஆண்டு சிறை, 1.95 கோடி அபராதம்
அட்மின் மீடியா
0
யாருடைய மதத்தை அவமதித்தாலும் 5 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1.95 கோடி அபராதம் விதிக்கப்படும் என அபுதாபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒருவர் மற்றவரின் மதம், இனம், சாதி, நிறம் உள்ளிட்ட வேறுபாட்டை குறித்து அவமதிக்கும் செயல் உலகம் முழுவதும் நடந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களில் இது போன்று அவமதிக்கும் வகையிலான பதிவுகள் அதிகரித்து வருகின்றன.
இச்சம்பவங்களை கட்டுபடுத்த UAE நாட்டில் எந்த மதத்தை அவமதித்தாலும் அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1 மில்லியன் திர்ஹாம் இந்திய மதிப்பில் ரூ.1.95 கோடி அபராதமும் விதிக்கப்படும் என அபுதாபி நீதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.