ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர் விபத்தில் இறந்தால் ரூ.1 லட்சம் கிடைக்குமா ?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஏடிஎம் அட்டை வைத்திருப்போர் எதிர்பாராமல் விபத்தில் இறந்துவிட்டால் அவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது. எந்த வங்கியின் அட்டை வைத்து இருக்கிறோமோ அந்த வங்கி மூலம் இத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது பலருக்கு தெரியவில்லை.என பலரும் ஷேர் செய்கின்றார்கள்.
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது.
ஆம் அந்த தகவல் பாதி உண்மை பாதி பொய்யானது
உண்மை என்ன வென்றால் ரூபே ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்கள் விபத்தில் மரணம் மற்றும் காயம் தொடர்பான காப்பீட்டு தொகை ரூ 1 லட்சம் மேலும் ரூபே பிரீமியம் அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.2 லட்சம் கிடைக்கும் என்பது தான் உண்மை
ரூபே ஏடிஎம் அட்டை வைத்திருப்பவர்களுக்கு விபத்தில் ஏற்படும் இழப்புக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது
மேலும் இது ரூபே ஏடி எம் அட்டை வைத்துள்ளவர்களுக்கும் மட்டும் தான் Master, VISA உள்ளிட்ட பிற ஏடிஎம் அட்டை வைத்துள்ளவர்களுக்கும் சில வங்கியில் வழங்குகின்றார்கள்
ரூபே அட்டைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பணபரிமாற்ற அட்டைகள் உள்நாட்டைச் சேர்ந்த ரூபே அட்டைகளை பிரபலப்படுத்த மத்திய அரசு எடுத்த் நடவடிக்கை தான் அது
அதில் ஒன்றாக, பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு ரூபே அட்டைகளை வழங்கி உள்ளது. இந்திய மக்கள் வெளிநாட்டு நிறுவன அட்டைகளின் பயன்பாட்டை குறைத்து ரூபே அட்டைகளை உபயோகிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
Tags: மறுப்பு செய்தி