அஸ்ஸாம் அகதிமுகாமில் நடப்பது என ஷேர் செய்யும் வீடியோவின் உண்மை என்ன
அட்மின் மீடியா
0
காவலர்கள் சில நபர்களை அடித்து ஒரு மைதானத்தில் ஒன்றும் சேர்க்கும் ஒரு வீடியோவை NRC சம்பவத்துடன் தொடர்பு உடையதாக
ஒரு செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
இது நடந்தது நவம்பர் 2018ல் இலங்கையில் உள்ள அங்குணகௌபெலஸ்ஸ என்ற பகுதியில் உள்ள சிறைசாலை உள்ள சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி காட்சிகள் கசிந்து சர்ச்சையை உருவாக்கியது.
கைதிகள் தாக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், முழங்கால்களில் தங்கள் தலைக்கு மேலே கைகளை வைத்து வலம் வரவும் செய்யப்பட்டனர்.
சிறை வளாகத்தில் நடந்த எஸ்.டி.எஃப் சோதனைகளை கண்டித்து சிறை கண்காணிப்பாளரின் நடத்தைக்கு எதிர்ப்பு தெரிவித்த கைதிகளை 2018 நவம்பர் 22 அன்று இரக்கமின்றி அதிகாரிகளால் தாக்கியது தெரியவந்தது.
இந்த செய்தியைத்தான இங்கு இன்றைய சூழ்நிலையான NRC யுடன் பொய்யாக சமுகவளைதளத்தில் பரப்புகின்றனர்
அட்மின் மீடியா ஆதாரம்
https://m.youtube.com/watch?v=q8pyD7EW0AI&feature=emb_title
http://www.dailymirror.lk/news-features/Behind-the-bars-of-Angunakolapelessa-Super-Prison/131-161374
Tags: மறுப்பு செய்தி