உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் முழுவிவரம்
அட்மின் மீடியா
0
உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரான திமுகவின் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் காலை 10 மணியளவில் விசாரணை தொடங்கியது
உச்சநீதிமன்ற உத்தரவு படி தான் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது என சொல்கிறார்கள் ஆனால் சட்ட சிக்கல்களை நீக்கிவிட்டு தான் அறிவிப்பை வெளியிடவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதை மறந்துவிட்டார்கள் மேலும் தமிழகத்தில் புதியதாக உருவான 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறைப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை எனவே வார்டு மறுவரையறை செய்த பின்புதான் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்என திமுக வாதம்
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்தீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்க்கு தொகுதி மறுவரையறை பணிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யகூடியது எனவும் இடஒதுக்கீடு பணிகளும் நிறைவடைந்துவிட்டது. வாக்கு பதிவு எந்திரங்களை கொண்டு வருவது மட்டும் தான் பாக்கி இருக்க கூடிய வேலை என தேர்தல் ஆனையம் பதிலளித்தது
அதற்க்கு நீதிபதிகள் எதற்காக தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது குழப்பமில்லாமல், சரியான இடஒதுக்கீடு முறைகளை பின்பற்ற தானே. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் அதை செய்யவில்லை என்றால் குழப்பம் ஏற்படாதா? உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தான் தொகுதி மறுவரையறை செய்யபட்டுள்ளது மேலும் 2021 ம் ஆண்டு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகே மீண்டும் மறுவரையறை செய்யமுடியும்என்று பதில் அளித்த தமிழக அரசுக்கு
பழைய தொகுதி மறுவரையறை பணிகளை தான் மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்றால் எதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன? பழைய நிலையே தொடரும் என்றால் எப்படி புரிந்து கொள்வது? மூன்று மாவட்டங்களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா? என நீதிபதிகள் கேள்வி
அத்ற்க்கு 9 புதிய மாவட்ட தொகுதி மறுவரையறைக்காக முழு தேர்தலுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும், வேண்டுமெனில் 9 புதிய மாவட்டத்துக்கு மட்டும் தேர்தலை தள்ளி வையுங்கள் என - தமிழக அரசு பதில்அளித்துள்ளது
தடை விதித்தால் தமிழகம் முழுவதும் விதிக்கவும் திமுக. நீதிமன்றதில் வாதம்
வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கலாம் என தமிழக அரசு வாதம் மேலும் அரசிடம் மறுவரையறை தொடர்பாக நீதிமன்ற கருத்துக்கள் தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி சில கருத்துக்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து வழக்கு ஒத்திவைப்பு.
மதியம் 2 மணிக்குள் உள்ளாட்சி தேர்தல் பற்றி பதிலளிக்க உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திர்கு உத்தரவு
9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பதில் அளித்தது
அதன் பின்பு பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து
Tags: முக்கிய செய்தி