Breaking News

போலிஸார் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடினார்களா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
என்.ஆர்.சி மற்றும் சிஏபி  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக  போலிஸாரும் கையில்   பதாகைகள் உடன் போராட்டம் 
என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

இது நடந்து கடந்த நவம்பர் 2019


டில்லியில் சில நாட்களுக்கு முன்னர் ஹிசார் கோர்ட்டில் வக்கீல்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.

தங்களை தாக்கிய வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து, டில்லியில் போலீசார் திடீர் போராட்டத்தில் இறங்கினர்

டில்லி போலீஸ் தலைமை அலுவலகத்தில் போலீசார் சீருடையுடன் கையில் பதாகைகளுடன் , கறுப்பு நிற பேண்ட் கட்டி ஆர்பாட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், நியாயம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

டில்லி போலீசாருக்கு ஆதரவாக, போலீசாரின் குடும்பத்தினர் இந்தியா கேட் பகுதியில் பேரணி நடத்தினர்.

இந்த போட்டோக்களை எடுத்து அதை போட்டோ சாப் செய்து  என்.ஆர்.சி மற்றும் சிஏபி  குடியுரிமை சட்டத்திற்கு எதிரான  வாசகங்களாக திருத்தி பொய்யாக சமுகவளைதளத்தில் பரப்புகின்றனர்

அட்மின் மிடியா ஆதாரம்



https://m.youtube.com/watch?v=OlcPV2d42Xw&feature=emb_title



https://m.dinamalar.com/detail.php?id=2404696

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback