Breaking News

நிர்பயா எண் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
இந்த  நிர்பயா  எண்ணை உங்கள் மனைவி, மகள்கள், சகோதரிகள், தாய்மார்கள், நண்பர்கள் மற்றும் உங்களுக்குத் தெரிந்த அனைத்து பெண்களுக்கும் அனுப்புங்கள்..இவர் காப்பாற்றும்படி அவர்களிடம் கேளுங்கள் .. எல்லா ஆண்களும் உங்களுக்குத் தெரிந்த அனைத்து பெண்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 

அவசர காலங்களில். பெண்கள் வெற்று
எஸ்.எம் எஸ் அனுப்பலாம் அல்லது தவறவிட்ட அழைப்பை வழங்கலாம்..அதனால் காவல்துறை உங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து உங்களுக்கு உதவும்

Send this *Nirbhaya* number to your wife, daughters, sisters, mothers, friends, and all the ladies you know..ask them to save it.. all the men please share with all the ladies you know....
In case of emergency.Ladies can send blank msg or can give missed call..so that police will find your location and help u 🌹

என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது

அப்படியானால் உண்மை என்ன?

சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்  மூலமாக விநியோகிக்கப்பட்ட மொபைல் தொலைபேசி எண்- 9833312222, 

2015 ஆம் ஆண்டில் அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) .  பெண்களின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பான செய்திகள், படங்கள் அல்லது வீடியோக்களை வாட்ஸ்அப் வழியாக அனுப்ப ரயில்வே பயணிகளும் இந்த எண்ணைப் பயன்படுத்தலாம் என அறிமுகப்படுத்தியது

அதன் சேவைகள் 2018 இல் நிறுத்தப்பட்டன.
இந்த எண்ணுக்கு இனி வாட்ஸ்அப்பில் செய்திகளை அனுப்ப முடியாது. இதை மும்பை ரயில்வே போலீசார் உறுதிப்படுத்தினர்.

மும்பை காவல் துறை  9833312222
நிர்பயா என்னை முடக்கியதற்க்கான ஆதாரம்

https://web.archive.org/web/20190522121249/http:/www.mumbairlypolice.gov.in:80/Default.aspx

அந்த எண்னுக்கான சேவை நிறுத்த பட்ட பிறகும், அந்த பழய செய்தியை இன்று வரை அந்த சேவை இருப்பது போன்று பொய்யாக பரப்பிக்கொண்டு உள்ளனர்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback