மின் புகார்களுக்கு புகார் அளிக்க இனி EB அலுவலகம் செல்ல வேண்டாம் ஒரு போன் பன்னா போதும்
அட்மின் மீடியா
0
மின்தடை புகார்களை 1912 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்
மேலும் 1800 599 2912 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
மேலும் 94458 50811 என்ற வாட்ஸப் எண்னிலும் புகார் அளிக்கலாம்
நீங்கள் உங்கள் பகுதிகளில் நிலவும் மின்சாரம் சம்பந்தமான குறைபாடுகளை மேல் உள்ள எண்னில் தொடர்பு கொண்டு, அங்குள்ள ஊழியர்களிடம் புகாராக தெரிவிக்கலாம்.
அவர்கள் அந்த புகாரின் மீது சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் பாதுகாப்பில்லாமல் இருக்கும் உடைந்த, சாய்ந்த மின் கம்பங்கள், கதவு திறந்த நிலையில் உள்ள மின் பெட்டிகள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் போன்ற தகவல்களை படங்கள் மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ சம்பந்தப்பட்ட பகுதியின் தெளிவான விலாசத்துடன் 9445851912 வாட்ஸ்-அப் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பலாம்.
Tags: முக்கிய செய்தி