Breaking News

செல்போன் டவர் அமைத்து தருவதாக கூறி பண மோசடி

அட்மின் மீடியா
0
செல்போன் டவர் அமைத்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபடுவதாக வாட்ஸப்பில் செய்திகள் பரவி வருகின்றன.




இது உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது.....

ஆம்.... இது உண்மைதான்


பிரபல தனியார் தொலைபேசி நிறுவனங்கள் போல் போலியாக ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு விடுத்து  உங்கள் இல்லம் செல்போன் டவர் அமைக்க தேர்வாகி உள்ளது என்று கூறுவார்கள்


பிறகு உங்களுக்கு தொலைபேசி நிறுவனத்திலிருந்து முன்பணமாக 50 லட்சம் ரூபாய்  வரை கொடுக்கப்படும் என்றும் மாதம் 40,000 ரூபாய் வாடகையாக கொடுக்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறுவார்கள் அதற்கு நீங்கள் அவர்கள் சொல்லும் வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும் என்று உங்களை ஒரு வங்கியில் பணம் கட்ட சொல்வார்கள் இது முற்றிலும் ஏமாற்று வேலையே யாரும் இதை நம்பி ஏமாற வேண்டாம்

இது போல் ஏமாந்தவர்கள் பல பேர் உள்ளார்கள்.

ஆனால் உண்மையாக கம்பெனி என்ன செய்யும் என்றால் அந்த இடத்தை பார்த்து அதன்பிறகு முன் பணம் எவ்வளவு, மாத வாடகை எவ்வளவு என்ரு பேசி முறையாக அக்ரிமெண்ட் செய்து அதன்பிறகு அங்கு டவர் வைக்க நடவடிக்கை எடுப்பார்கள். முக்கிய குறிப்பு  : உங்களிடம் எந்தவித பணமும் வாங்க மாட்டார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எனவே பொய்யான ஆசாமிகள் வலையில் வீழ்ந்து பணத்தை இழக்காதீர்கள் என அட்மின் மீடியா சார்பாக உங்களை எச்சரிக்கின்றோம்

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback