இன்று குழந்தைகள் தினம் பெற்றோர்களே இன்று நீங்கள் செய்யவேண்டியது இதுதான்
அட்மின் மீடியா
0
இன்று நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ‘மீண்டும் இணைவதற்காக துண்டித்து வையுங்கள்’ என்ற பிரசாரம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவற்றை உணர்த்தும் வகையிலும், பெற்ற தங்களது குழந்தைகளுடன் உரையாட வாய்ப்பு ஏற்படுத்தும் வகையிலும், இன்று பெற்றோர்கள் தங்களது செல்போனை ஒருமணி நேரம் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து பள்ளிகளுக்கும் மேற்கண்ட அறிவிப்பை தெரிவித்து, குழந்தைகள் மூலம் பெற்றோருக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆகையால் பெற்றோர்களாகிய நாம் செய்ய வேண்டியது இதுதான்
இறைவன் மனிதனுக்கு கொடுத்த செலவங்களிலேயே மிகச் சிறந்த செல்வம் வாரிசு செல்வம்தான்
பிள்ளைகளை இறைவன் நமக்கு இலவசமாக கொடுத்ததால்தான் என்னவோ நாம் பிள்ளைகளின் மீது அதிக அக்கறை செலுத்துவது இல்லை
பல இல்லங்களில் தாய் தந்தை இருவருக்கும் பிள்ளைகளுக்கும் சம்பந்தம் இல்லாதது போல இருக்கும் சூழ்நிலை யே இருக்கும்
காரணம் மனிதனின் இயந்திர வாழ்க்கை
நவீன காலத்தில் மக்களின் நிலை நேரம் இல்லை என்ன ஒற்றை காரணத்தால் குடும்பம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியவர்களுடன் உரையாட கூட முடிய வில்லை
வீட்டில் இருக்கும் ஒருசில மணி நேரத்திலும், செல்போனில் மூழ்கி விடுகின்றோம்
அல்லது அவசியம் இருந்தால் மட்டுமே செல்போனில் ஒரு சில வினாடிகள்
நமது குடும்பதாரிடம் பேசும் சூழ்நிலை எற்படுகின்றது
குறிப்பாக, பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் கூட நேரத்தை செலவிட வாய்ப்பில்லாமல் போகிறது.
அதனாலேயே பிள்ளைகள் மீது கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை அதிக அதிகமாக உருவாகும்
அதனால் பிள்ளைகள் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி ஏக்கத்தில் தவிக்கும் பிள்ளைகள் ஏராளம் ஏராளம்
பெற்றோர்களுக்கு அட்மின் மீடியாவின் சார்பாக ஓர் வேண்டுகோள் வைக்கின்றோம்
அதாவது என்னவென்றால் நாம் பிள்ளைகளிடம் அதிக அக்கறையும் கவனமும் செலுத்தினால் பிள்ளைகள் மிகவும் தெளிவாகவும் அழகாகவும் நல்லவனாகவும் வளரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை
ஆகையால் இன்று குழந்தைகள் தினம் என்பதை முன்னிட்டு நாங்கள் கூறுவதை வேண்டுமானால் நீங்கள் குறைந்தது ஒரு வாரம் செய்து பாருங்கள் உங்கள் பிள்ளைகளிடம் அதீத வித்தியாசத்தையும் மாற்றத்தையும் நீங்கள் காணலாம்
அதாவது என்னவென்றால் மிக மிக இலேசான விஷயம்தான்
ஆக குறைந்தது உங்களின் பிள்ளைகளிடம் ஒரு மணிநேரம் நேரத்தை ஒதுக்கி இந்த ஒரு வாரத்திற்கு மட்டும் செலவிட்டு பாருங்கள்
உங்களின் பிள்ளைகளின் மாற்றத்தை உணர்ந்து நீங்களே இதை வாழ்க்கை முழுவதும் கடைபிடிக்க ஆரம்பித்து விடுவீர்கள்
Tags: முக்கிய செய்தி