பேக்கரியில் முட்டையை ஓட்டுடன் அரைக்கின்றார்களா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
பேக்கரிகளில் கேக் தயாரிக்க முட்டைகளை கழுவாமலேயே உடைத்து ஓட்டுடன் அரைக்கும் காட்சி
என்ற ஒரு செய்தியையும் ஓர் வீடியோவையும் மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டிருக்கின்றார்கள் அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இன்று அனைத்து விஷயங்களும் நவீனமயமாக்கப்பட்ட எந்திரங்களைக் கொண்டு அனைத்து வேலைகளும் துரிதமாக சுகாதாரமாகும் நடத்தப்படுகின்றது
அது போன்றுதான் இந்த பேக்கரியில் முட்டை உடைக்கும் இயந்திரமும் ஆனால் மேலே சொன்னது போல் ஓட்டுடன் முட்டைகளும் ஓடுகளும் ஒன்றாக அங்கு உடைக்கப்பட்டு அரைக்கப்பட்டவில்லை
அந்த வீடியோவில் சற்று கவனித்துப் பார்த்தால் பக்கவாட்டில் இருக்கும் சாக்கு பையில் முட்டை ஓடுகள் விழுவதற்க்காக வைக்கப்பட்டுள்ளதை காணலாம்
அட்மின் மிடியா ஆதாரம்
அதுபோல் முட்டை ஓடுகளின் மேல் கோழியின் கழிவுகளும் ஒட்டிக் கொண்டிருப்பதால் சுத்தம் செய்யப்பட்ட வில்லை என்பது போன்றும் கூறுகின்றார்கள்
இன்று பண்ணைகள் இருந்துவரும் முட்டைகள் அனைத்தும் இயந்திரங்களைக் கொண்டும் அல்லது மனிதர்களை கொண்டு சுத்தம் செய்யப்பட்ட பிறகுதான் விற்பனைக்காக வெளியே அனுப்பப்படுகின்றது
அட்மின் மிடியாவின் மீடியா ஆதாரம்
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி