Breaking News

வாட்ஸப்பில் ஷேர் செய்தா பணம் சம்பாதிக்கலாமா? எப்படி

அட்மின் மீடியா
0
pls share pannunga 0771926984என் பெயர் NIROSA   Kandy perathene universityநான் M.B.A (3year) படிக்கிறேன். எனக்கு இதயப் புற்று நோய். அறுவை சிகிச்சை செய்ய ரூ. 6 லட்சம் வரைசெலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 
ஆனால் அவ்வளவு பணம் என்கிட்ட இல்லை.நீங்கள் எனக்காக பணம் அனுப்பவேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு share மட்டும் தான். நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஃசேர் க்கும் 10 பைசா எனக்கு கிடைக்கிறது. 

தயவு செய்து இந்த மெசேஜ்- ஐ ஜோக் என்று நினைத்தால் மேலே இருக்கும் என் பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொள்ளவும். 

தயவு செய்து 🙏 உதவி செய்யுங்கள். மனசாட்சி இருந்தால் மட்டும் பகிருங்கள்

என்ற ஒரு செய்தியை மக்கள் சமூக வலை தளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றனர்

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

 

அப்படியானால் உண்மை என்ன?

மேலே கொடுக்கப்பட்ட  மொபைல் எண்ணும் தவறானது ஏன் என்றால் அதில் 9 இலக்கம் மட்டுமே உள்ளது. ஒரு நம்பர் அதில் இல்லை

சமூக வலைதளங்களில் மெசஜ் ஷேர் செய்வதால் கூகுள், வாட்ஸப், பேஸ்புக், டிவிட்டர், போன்ற எந்த ஒரு நிறுவனமும் பணம் கொடுப்பதில்லை

ஷேர் செய்யப்படும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்ஸ், ஷேர் அளவைப் பொறுத்து ஃபேஸ்புக் நிதி உதவி அளிப்பது இல்லை.

சற்று நன்றாக சிந்தித்து பாருங்கள் நீங்கள் தினமும் சமுகவளைதளத்தில் நூற்றுக்கணக்கான செய்துகளை அனுப்புகின்றிர்கள் அதற்க்கு ஏதாவது உங்கள் கணக்கில் பனம் வந்து உள்ளதா அல்லது 1ஜிபி  2 ஜிபி டேட்டா அதிகரித்து உள்ளதா ...மாதம் மாதம் நீங்கள் உங்கள் மொபைல்க்கு ரிசர்ஜ் செய்து கொண்டு தானோ இருக்கின்றிர்கள்

நாம் ஏற்கனவே இது போன்று வரும் செய்திகளுக்கு மறுப்பு செய்தி ஒன்றையும் வெளியிட்டு இருந்தோம்


ஆகையால் மீண்டும் மீண்டும் இது போன்ற  பொய்யான செய்திகளை யாரும் ஷேர் செய்யாதீர்கள்.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback