ஆஸ்திரேலியாவின் தேசிய மொழியாக தமிழ் மொழி அறிவிப்பா ?
அட்மின் மீடியா
0
ஆஸ்திரேலிய நாட்டில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை
ஷேர் செய்து வருகின்றார்கள். அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
இந்த வதந்தி செய்தி பல ஆண்டுகளாக சமூகவலைதளங்களில் பரவி வருகின்றது
ஆனால் உண்மை என்ன
ஆஸ்திரேலியாவின் தேசிய பாடத்திட்டத்தில் தமிழை சேர்க்க வேண்டும் என்று
ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் கணிசமாக வாழும் வெட்வோர்த்வில்லே
பகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஹக் மெக்டோர்மோட். இவர்
ஆஸ்திரேலிய கல்வி அமைச்சரிடம் எழுத்துப் பூர்வ கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.. ஆனால் அந்த
சம்பவம் கூட 2016 ல் நடந்தது
அட்மின் மீடியா
ஆதாரம்
இந்த செய்தியினை
பலரும் தவறாக திரித்து ஆஸ்திரேலியாவில் தமிழ் தேசிய மொழியாக இணைத்து உள்ளதாக
வதந்திகள் பரப்பி வருகின்றனர்.
மேலும் நம் செம்மொழியான
தமிழ் மொழி இந்தியா , இலங்கை, சிங்கப்பூர் ஆகிய 3 நாட்டில் மட்டுமே நம் தமிழ் மொழி
ஆட்சி மொழியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அட்மின் மீடியா
ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி