Breaking News

கோவையில் ''பப்ஜி'' கேம் விளையாடிக் கொண்டிருந்த மாணவன் மரணம்.!

அட்மின் மீடியா
0
 கோவை சுங்கம் சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது வயது 21 
 இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.




கடந்த 3ம் தேதி பெற்றோர்கள் வெளியே சென்றுவிட்ட நிலையில் வீட்டில் உள்ள தனி அறையில் கதவை பூட்டிக்கொண்டு காலை 11 மணிமுதல் செல்போனில் பப்ஜி கேமை அவர் விளையாடியுள்ளார்.

மதியம் ஒருமணியளவில் அவரின் பெற்றோர்கள் இருவரும் சாகுலின் செல்போனில் அழைத்துள்ளனர். ஆனால், நீண்ட நேரம் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. பல முறை முயற்சித்தும் போன் எடுக்கப்படாமலேயே இருந்துள்ளது. மகன் தூங்கியிருக்கலாம் என்று நினைத்து கொண்ட பெற்றோர் இது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

மதியம் 3 மணி அளவில் வீடு திரும்பிய அவர்கள் மகன் இருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவும் திறக்கப்படாமலே இருந்துள்ளது. 

உள் இருந்தும் எந்த சத்தமும் வரவில்லை.அதிர்ச்சியடைந்த அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள் சென்று பார்த்த பொழுது, மகன் பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்த நிலையில், அப்படியே நாக்கை கடித்தவாறு கை கால் இழுத்துக்கொண்டு சுயநினைவு இல்லாமல் கிடப்பதை கண்ட பெற்றோர்கள் உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பல முயற்சிகள் செய்தும் பலனளிக்காமல், நேற்று இரவு 8 மணி அளவில் ஷாகுல் ஹமீது இறந்துள்ளார். பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

நீண்ட நேரம் செல்போன் கேம் விளையாடியதில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வலிப்பு ஏற்பட்டு அவருக்கு மரணம் நேர்ந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

21 வயதே ஆன இளம் வாலிபர் பப்ஜி வீடியோ கேம் விளையாடி இறந்தது அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

எனவே உங்கள் வீட்டு பிள்ளைகளையும்  என்ன செய்கின்றான்  என கவனியுங்கள்

Give Us Your Feedback