ஜப்பான் வானின் நிறம் ரோஸ்கலரில் மாறியது கியாமத்நாளின் அடையாளமா?
அட்மின் மீடியா
0
ஜப்பான் வானின் நிறம் ரோஸ்கலரில் மாறியது கியாமத்நாளின் அடையாளமா?
கடந்த வாரம் ஜப்பானில் ஹிகிபிஸ் புயல் காரணமாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவுவிற்க்கு கனமழை பெய்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்
அந்த நேரத்தில் அந்த நாட்டில் வானில் மாற்றம் ஏற்பட்டு ரோஸ்கலரில் மாறியது. அந்த புகைபடங்கள் , வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவியது.
அந்த விஷயத்தை பல இஸ்லாமிய சகோதரர்கள் கியாமத் நாள் நெருங்கிவிட்டது கியாமத் நாளின் அடையாளங்கள் ஒன்று நிகழ்ந்துவிட்டது என்று கீழ்காணும் வசனத்தை மேற்கோள் காட்டி செய்தியை பரப்புகின்றார்கள்
அதற்க்கு ஆதாரமாக இறைவன் திருமறை குர்ஆனில் கூறுகிறான்:
(கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
(அல்குர்ஆன் : 55:37)
என்று இந்த வசனத்தை மேற்கோள் காட்டி கியாமத் நாளின் அடையாளம் நிகழ்ந்துவிட்டது என்று குறிப்பிடுகிறார்கள்
- நாம் இங்கு ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் ஜப்பானின் வானம் கலர் மாறியதும் உண்மைதான் அல்லாஹ் திருமறையில் கூறியதும் உண்மைதான்
ஆனால் இந்த விஷயத்தை கியாமத் நாளோடு ஒப்பிடுவது முற்றிலும் தவறான விஷயமாகும்
ஒரு குறிப்பிட்ட பகுதியின் வானம் மட்டும் அவ்வாறு ஆகாது முழு வானமும் அவ்வாறு ஆகும் அதுதான் அந்த வசனத்தின் விரிவாக்கம்
சரி இந்த விஷயத்தை நாம் எவ்வாறு பார்க்கவேண்டும் என்று கூறினால் ஒருசிலர் குரானின் உள்ள விஷயத்தை இது எவ்வாறு சாத்தியமாகும் என்று ஏளனமாக கேள்வி கேட்பார்கள் அவர்களுக்கு இந்த செயல் ஒரு அத்தாட்சியாகும்
ஒரு குறிப்பிட்ட பகுதியை செந்நிறமாக மாற்றிய அல்லாஹ்வுக்கு முழு உலகத்தையும் மாற்றுவது இயலாத காரியம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
இதுதான் அங்கு நடந்ததற்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய படிப்பினையாகும்.
கியாமத் நாளின் அடையாளங்களின் எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தாலும் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று நாம் அஞ்ச வேண்டும் அது உண்மையான விஷயம் தான்
அதற்காக இதுதான் கியாமத் நாளின் அடையாளம் என்று நாம் குறிப்பிட்டு கூறுவது தவறான விஷயமாகும்
இறைவன் நம் அனைவருக்கும் சிந்திக்கும் ஆற்றலையும் அவனுக்கு முழுமையாக கட்டுப்படும் பக்குவத்தையும் வழங்குவானாக!!!
ஜப்பான் வானின் நிறம் ரோஸ்கலரில் மாறிய வீடியோ
Tags: மறுப்பு செய்தி