மதுரை மணிகண்டன் ரோபட்டால் சுஜித்தை ஏன் மீட்கமுடியவில்லை
அட்மின் மீடியா
0
2 வயது குழந்தை சுஜித்தை மீட்க மணிகண்டனின் போர்வெல் ரோபாட்டிக்கையும் பயன்படுத்தி விட்டனர்.
எனினும் மிக சிறிய துளை என்பதால் இந்த ரோபாட்டால் உள்ளே செல்ல முடியவில்லை.
மதுரையை சேர்ந்தவர் மணிகண்டன். 46 வயதான இவர் பிளம்பராக பணிபுரிந்து வந்தார்.
ஆழ்துளை கிணறுகளில் சிக்கி குழந்தைகள் இறக்கும் நிகழ்வுகளை கண்ட இவர் குழந்தைகளை மீட்கும் ரோபாட்டை கடந்த 2014-இல் கண்டுபிடித்தார்.
இவரது ரோபாட்டிக்கை பயன்படுத்தி கடந்த 2014-ஆம் ஆண்டு சங்கரன்கோவில் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது ஹர்ஷன் மீட்கப்பட்டார்.
அது போல் திருவண்ணாமலையை சேர்ந்த சுஜித்தை மீட்கவும் இவரது ரோபாட்டிக் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
துரதிருஷ்டவசமாக குழந்தையின் கைகளை ரோபாட் இயந்திரத்தால் இறுக்கி பிடிக்க முடியவில்லை.
இந்த இயந்திரத்தால் 1000 அடி ஆழம் வரை செல்லலாம்.
50 கிலோ எடையை தூக்க முடியும். சிறிய கேமராவும் இதில்பொருத்தப்பட்டுள்ளது.
இதனுடன் இணைக்கப்பட்ட சிறிய டிவியின் உதவியால் குழந்தையின் நடவடிக்கைகளை காணலாம்.
இதில் கை போன்ற ஒரு இயந்திரம் இருப்பதால் துளையினுள் சென்று குழந்தையை அலேக்காக தூக் இத்தகைய இயந்திரத்தை கொண்டு திருச்சி மணப்பாறையில் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும் முயற்சி தோல்வியில் முடிந்தது