Breaking News

உலகத்தில் மழை பெய்யாத ஒரு கிராமம் உண்மையா?

அட்மின் மீடியா
0
உலகத்தில் மழை பெய்யாத ஒரு கிராமம் மேகங்களுக்கு மேலே உள்ளது ஹரஸ் என்ற பகுதியில் ஃல்ஹூதைப் என்ற இடத்தில் உள்ளது ஏமன் நாட்டின் ஸனா நகருக்கு மேற்கு பகுதியில் உள்ளது நீங்கள் இந்த ரம்யமான காட்சியையும் மேகங்கள் கீழே உள்ளதையும், ஊர் மேலே உள்ளதையும் காணலாம்.


என சமீபகாலத்தில் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவலாக  பரப்பிக்கொண்டு வருகின்றனர்

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு


 

ஆம் அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

மேகம் என்றால் என்ன 

நீர் ஆவியாதலினால் மேலே செல்லும் நீராவியானது குளிர்ந்து வளிமண்டல பகுதியை அடையும் போது அவை நுண்ணிய நீர்த்திவலைகளாக மாறுகின்றன. இந்த நீர்த்திவலைகளின் தொகுப்பிற்கு மேகம் என்று பெயர்.  உலகில் மழை பொழியாத இடம் என்று எங்கும் இல்லை வானம் இருக்கும் இடம் எல்லாம் மழை பொழியும்  அப்படி வானத்திற்க்கு கீழ் ஏழு அடுக்கில் மேக கூட்டங்கள் உள்ளது. அவை பல்வேறு உயரங்களில் இருக்கும்.

 
 அதாவது நாம் கண்னால் பார்க்கும் மேகத்திற்க்கு மேல் அதே போல் இன்னும் 6 அடுக்கு உள்ளது. உதாரணமாக நாம் விமானத்தில் சென்றால் நமக்கு கீழ் ஒரு மேக கூட்டம் இருக்கும் அதேபோல் நம்க்கு மேலும் ஒரு மேக கூட்டம் இருக்கும் அதுதான்.

சரி  அதற்க்கு மேல் இன்னொரு முக்கிய விஷயம்  மேகம் போல் இருக்கும் ஆனால் மேகம் இல்லை அது தான் பனிமூட்டம் அது  நாம் ஊட்டி, கொடைகானல் மூனாறு போன்ற மலைபிரதேசங்களில் காணலாம் அதிகாலை அந்த பனி மூட்டம் இருக்கும் சூரியன் வர வர அந்த பனி மூட்டம் கரைந்து விடும் அது போல் தான் அந்த வீடியோவும் பனி மூட்டம்தான்

ஆம் அது இறைவனின் அருட்கொடை  அதனை ரசியுங்கள் அதற்க்காக பொய் செய்தி பரப்பாதீர்கள்

அந்த மேகமூட்டம் இல்லாமல் சாதாரணநாட்களில் அந்த இடம் ஏமன் நாட்டில் உள்ள அல் ஹூதைப் என்ற பகுதி

 https://www.youtube.com/watch?v=qqJSqAjtbCA

 
அந்த வீடியோவினை பரப்புபவர்கள்  சொல்லப்பட்டது போல மழை பொழிய வில்லை என்றால் அந்த கிராமத்தில் நீர் இல்லாமல் எப்படி மக்கள் வீடு கட்டி கொண்டு அங்கு உயிர் வாழ முடியும் என ஒரு அடிப்படை அறிவு கூட இல்லையா?

மனிதன் நிலவிலும் செவ்வாய் கிரகத்திலும் உயிர் வாழ அங்கு தண்னிர் இருக்குமா என முயற்சி செய்து கொண்டு இருக்கின்றான்

நமது நெட்டிசன்கள் இங்கு மழையே பொழியாது என  தங்களின் ஆராச்சியின்  முடிவை கூறுகிறார்கள்

அந்த மேகங்களுக்கு மேல் உள்ள கிராமத்தில் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் மக்கள் வீடுகட்டி வாழ்கின்றனர்


மேகங்களில் எத்தனை வகைகள் உள்ளது என முழுமையாக அறிய

அட்மின் மிடியாவின் ஆதாரம்



https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback