Breaking News

அதிமுக எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு - மறு வாக்கு எண்ணிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0
அதிமுக எம்.எல்.ஏ வெற்றியை எதிர்த்து வழக்கு - மறு வாக்கு எண்ணிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


  
ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., இன்பதுரை வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த தேர்தல் வழக்கில், மறு வாக்கு எண்ணிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இன்பதுரை, தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்பதுரை 69,596 ஓட்டுகளும், அப்பாவு 69,541 ஓட்டுகளும் பெற்றிருந்தனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.

இன்று இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகளை மீண்டும் எண்ண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 4-ம் தேதி தபால் வாக்குகள் மற்றும் 19, 20, 21 ஆகிய சுற்று எந்திரத்தில் பதிவான வாக்குகளை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Give Us Your Feedback