4 வது நாளாக தொடரும் மீட்பு பணி! மீண்டு வா சுர்ஜித்......
அட்மின் மீடியா
0
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 4 வது நாளாக இன்றும் தொடர்கிறது
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்க புதிய ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி 12 மணியளவில் தொடங்கியது
கடினமான பாறை இருப்பதால் தோண்டும் பணி தாமதம்
ரிக் எந்திரத்தின் நுனிப் பகுதியில் ஏற்பட்ட சிறு பழுது சரிசெய்யப்படுகிறது
பல்சக்கரத்தின் பழுதான பகுதியில் வெல்டிங் செய்யப்பட்டு மீண்டும் பணி நடக்கின்றது
இது வரை 40 அடி தோண்டப்பட்டு உள்ளது
இன்னும் 70 அடி தோண்டவேண்டும்
பாறை இருப்பதால் தோண்டும் பணி தாமதம்
இன்னமும் வேகமாக தோண்ட சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற புதிய டிரில் பிட் கொண்டுவரப்படுகின்றது.
அந்த பிட் கொண்டு 110 அடி ஆழம் தோண்டப்பட்டு அதன்பின்பு மண் சரியாமல் இருக்க இரும்பு பைப் புதைக்கப்படும்
அதன்பின்பு பக்கவாட்டில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும்
அதன்பின்பு சுர்ஜித் மீட்கபடுவார்
இறைவனிடம் வேண்டுவோம் நல்லமுறையில் உயிருடன் மீட்க