ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் சிறை
அட்மின் மீடியா
0
ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரு சிலர் ரயில்களில் பட்டாசுக்களை எடுத்து செல்கின்றனர். இதனால், ரயில்களில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ரயில்களில் பட்டாசுகளை எடுத்து செல்வதைத் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புபடை போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்களில் பயணிகள் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. பட்டாசுகளை எடுத்து
சென்றால், ரயில்வே சட்டம் 164-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதாவது, ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால், மூன்றாண்டு சிறை, ரூ.1,000
அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனை பெற நேரிடும் எனவே ரயில்களில் பட்டாசு எடுத்து செல்வதை தவிற்க்க அட்மின் மூடியா உங்களை அறிவுறுத்துகின்றது
Tags: முக்கிய செய்தி