Breaking News

சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்

 இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்


மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது.
இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்தவர்கள் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback