பாலுடன் இருமல் மருந்தை கலந்து கொடுத்ததால் குழந்தை மரணமா ?உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
பாலுடன் இருமல் மருந்தை கலந்து கொடுக்க வேண்டாம். இரண்டையும் கலப்பதால் விஷமாக மாறுகிறது. இதனை அறியாமல் ஒரு தாய் தன் குழந்தைக்கு இரண்டையும் கலந்து கொடுத்ததன் விளைவாக நான்கு குழந்தை இறந்துள்ளனர். என சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
இந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
பாலுடன் இருமல் மருந்து சேர்த்து கொடுக்கும் பொழுது உடல் மருந்தினை ஏற்றுக் கொள்வது தடுக்கப்படுவதால் இருமல் மருந்தினை பாலுடன் எடுத்துக் கொள்வது சரியானதாக இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாலுடன் காஃப் சிரப் மருந்தினை கலந்தால் விஷமாக மாறும் என கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை.
அட்மின் மீடியா ஆதாரம் 1
https://fit.thequint.com/fit-webqoof/can-drinking-cough-syrup-with-milk-kill-you-fact-check
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி