இருசக்கரவாகனத்திற்க்கு ரூ9800/- அபராதம் போட்டதற்க்கு போலிஸாரை தாக்கினார்களா ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
உத்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.9800/- அபராதம் போட்டதன் விளைவால் வாலிபர்கள் ஒன்று சேர்ந்து காவலர்களை தாக்கும் காட்சிகள்
என்று கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ உடன் இந்த செய்தி பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
குஜராத் சூரத் நகரிக் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் அது (ஏப்ரல் 2019)
குஜராத் சூரத் மாவட்டத்தின் மங்ரோல் தெகிசில் வன்கல் என்ற பகுதியில் அமைந்துள்ள அரசு மாணவர் விடுதி வளாகத்திற்குள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை காவல்துறையினர் அடித்து உதைத்ததாக விடுதி மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதற்க்காக "ஞாயிற்றுக்கிழமை, மாணவர்கள் ஒன்று திரண்டு வான்கல்-சங்க்வவ் மாநில நெடுஞ்சாலையை முற்றுகையை இட்டனர்.
காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை மாணவர் ஒன்று திரண்டு கற்கள் வீசி வாகனத்தையும் போலிஸையும் தாங்குகின்றார்கள்
அந்த வீடியொவை தான் பொய்யான வேறு காரணம் திரித்து பலரும் ஷேர் செய்கின்றார்கள்
போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதித்ததற்காக காவல்துறையினரை தாக்கப்படவில்லை.
அட்மின் மீடியா ஆதாரம் 1
அட்மின் மீடியா ஆதாரம் 2
அந்த வலையில் நீங்கள் வீழ்ந்து விடாதீர்கள் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.
Tags: மறுப்பு செய்தி