Breaking News

பான் கார்டுடன் ஆதார்கார்டை ஆன்லைனில் இணைப்பது எப்படி?

அட்மின் மீடியா
0
ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க 

                                               


பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது எனவே உங்கள் ஆதர் கார்டையும் பான் கார்டையும் உடனே இணைத்து கொள்ளுங்கள்


உடனே உங்கள் ஆதாரையும் பான் எண்ணையும் கீழ் உள்ள லின்ங்க் மூலம் உடனே இனைத்து கொள்ளுங்கள்


திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்

Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள விவரங்கள் பொருந்தவில்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை. உதாரணமாக பெயர் இரண்டிலும் ஒரே போல இல்லாமல் இருக்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எனப்படும் ரகசிய பாஸ்வேட் அனுப்பப்படும். அதை பயன்படுத்தி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதை பூர்த்தி செய்யலாம்.

 உங்க பான் கார்டு ஆதாருடன் லிங்க் ஆகியிருக்கா? செக் பன்னிக்குங்க

பலருக்கு தங்களது பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். 

பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே சரிபார்த்துக்கொள்ளலாம்.



மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து உங்கள்  பான் எண் மற்றும் ஆதார் எண்ணைப் பதிவிட்டாலே போதும்.

ஒருவேளை இவை இணைக்கப்படாமல் இருந்தால் உடனே இணைத்து விடுங்கள்


எஸ் எம். எஸ் மூலம் இணைக்க

பான் எண்னை ஆதார் எண்ணுடன் மொபைல் எஸ்எம்எஸ் மூலமும் இணைக்கலாம். 
 
இதற்காக நீங்கள் உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைத்து கொள்ளலாம். 
 
சரி இதை எப்படி செய்ய வேண்டும். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து UIDPAN 12 இலக்க ஆதார் எண் 10 இலக்க பான் நம்பரை டைப் செய்து மேற்கூறிய எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.

The format to send the SMS is as follows: 
 
UIDPAN <ஆதார் எண்><பான் எண்>

 
எடுத்துக்காட்டு
 
உங்கள் ஆதார் எண் 1111 2222 3333 
 
பான் எண் AAAPA0000Q
 
மொபைலில் மெசஜ் பாக்ஸில் UIDPAN 111122223333 AAAPA0000Q 
 
to 567678 or 56161.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback