ரத்தம் தேவைக்கு 104க்கு போன் செய்யனுமா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
இரத்தம் தேவையா 104 என்ற எண்ணுக்கு அழையுங்கள் ஒரு யூனிட் ₹450/- மட்டுமே என்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த செய்தி பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
இந்த தகவல் பொய்யானது யாரும் நம்பவேண்டாம்
யாரும் யாருக்கும் ஷேர் செய்யவேண்டாம்
ஆனால்...
104 இலவச எண்ணுக்கு போன் செய்தால்
சாதாரண காய்ச்சலுக்கும் டெங்கு காய்ச்சலுக்கும் என்ன வித்தியாசம்?'
மேலும் உடல்நலம் குறித்த ஆலோசனைகள்,
ஆரோக்கியமான வாழ்க்கைக்குரிய தகவல்கள்,
மனநலம் சார்ந்த கவுன்சலிங்
என அனைத்தையும் இலவசமாகப் பெறலாம்.
மேலும் போலி மருத்துவர்கள் குறித்து சுகாதார இணை இயக்குநர் அல்லது 104 தொலைப்பேசி எண்ணில் புகார் தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும்
ரத்தம் கொடுக்கும் பயனாளிகளின் தொடர்பு எண்கள் கொடுக்கபடும்
உடல் உறுப்பு தானங்கள் எப்படி செய்வது
புதிதாகப் பரவும் நோய்க்கான அறிகுறிகள்,
அந்த நோய்க்கான பரிசோதனைகள் எங்கு செய்யப்படுகின்றன, உரிய சிகிச்சைகள் எங்கு வழங்கப்படுகின்றன, வருமுன் பாதுகாத்துக்கொள்வது எப்படி
போன்ற பல விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் இலவசமாக 24 மணி நேரமும் விடை கிடைக்கும்
Tags: மறுப்பு செய்தி