Breaking News

சுகர் டெஸ்ட் என எயிட்ஸ் இரத்தம் ஏற்றுகின்றார்களா ? வதந்தியினை நம்பாதீர்கள்...

அட்மின் மீடியா
0


Attention எச்சரிக்கை அவசரம்....அவசரம்.... யாராவது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் மருத்துவக் கல்லூரி யிலிருந்து வருகிறோம். உங்கள் இரத்தத்தில் SUGAR இருக்கிறதா என இலவசமாகப் பரிசோதனை செய்து தருகின்றோம் எனக் கூறினால் உடனடியாக விரட்டுங்கள் அல்லது போலிஸ்ல் பிடித்து கொடுங்கள். அவர்கள்"ISIS   இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினால் எச். ஐ. வி. எயிட்ஸ் வைரசைப் பரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள். வீட்டில் உள்ளவர்கள், அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் வந்தபடியே பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படிக்கு:- தமிழ்நாடு காவல்துறை நன்றி. என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்





இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது 

மேலே உள்ள செய்தி பொய்யானது ஆகும்

இது போல் சம்பவம் எங்கும் நடக்கவில்லை


முதலில் காவல் துறை என்ற பெயரில் பொய் செய்தியை பரப்பி பொதிமக்களிடையே பீதியை உருவாக்குபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இரண்டாவது, படிப்பறிவும், விஞ்ஞான வளர்ச்சியும் மிகுந்த காலகட்டத்தில் வாழ்கிறோம், இது போன்ற செய்தி அறிவுக்கு பொருத்தமில்லாத செய்தி என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

மூண்றாவது தமிழகம் முழுவதும் இது போல் ஒரு சம்பவம் நடைபெற்றதாக எந்த ஒரு செய்தியும் இதுவரை வரவில்லை,  அப்படி ஏதேனும் நடந்திருந்தால் பல செய்திகளில் வந்து இருக்கும் ஆனால் இது போல் ஒரு செய்தியும் வரவில்லை

நான்காவது மேலே உள்ள செய்தியினை காவல்துறை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை அந்த படம் யாரோ காவல்துறை போல் பொய்யாக எடிட் செய்து உள்ளார்கள்

இப்படி பல விசயங்களை எழுதி கொண்டே போகலாம். தமக்கு கிடைக்கும் மெசேஜ் எல்லாம் பரப்பி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவீர்கள் எனில் நீங்கள் வாட்சப்பை உபயோக படுத்தாமல் சாதாரணமான மொபைலை உபயோகபடுத்தி சமுதாயத்திற்கு நல்லது செய்யுங்கள்.

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்கு போதுமான சான்றாகும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹூரைரா(ரலி)
நூல் : முஸ்லிம் - 6

எனவே யாரும் பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback