பஸ் ஸ்ட்ரைக் வாபஸ்: மக்கள் நிம்மதி
அட்மின் மீடியா
0
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
எடப்பட்டதால் போக்குவரத்து தொழிலாளர்கள் காலை முதல் நடத்தி வந்த ஸ்டிரைக் வாபஸ்
பெறப்பட்டுள்ளது
ஜூன் மாத சம்பளத்தை முழுமையாக வழங்காததை
கண்டித்து, போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்
காரணமாக, சென்னை நகரில் காலையில் இயக்கப்பட வேண்டிய சுமார் 500-க்கும் மேற்பட்ட
மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு
செல்வோரும் போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் கடும்
அவதியடைந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து
துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வங்கி விடுமுறை என்பதால் தான் மாநகர
போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இன்று வேலைநாள் என்பதால் மாலைக்குள் போக்குவரத்து
ஊழியர்களின் முழு ஊதியமும் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என உறுதி
கூறினார்.
இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து கழக
தொழிற்சங்க கூட்டமைப்பினருடன், எம்டிசி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில்
உடன்பாடு எட்டப்பட்டது இதனையடுத்து சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்களின் திடீர்
ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக தொமுச பொருளாளர் நடராஜன் அறிவித்தார்.