தபால்துறை தேர்வு முடிவை வெளியிட தடை
அட்மின் மீடியா
0
தபால்துறை தேர்வை நடத்த அனுமதித்துள்ள ஐகோர்ட் மதுரை கிளை, அதன் முடிவை வெளியிடக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
தபால்துறை போட்டி தேர்வுகள், இனி, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாளை நடைபெற உள்ள தேர்வை ரத்து செய்யக்கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில், மதுரையை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் தபால்துறை தேர்வை நடத்த அனுமதி அளித்ததுடன், மறு உத்தரவு வரும் தபால்துறை தேர்வு முடிவை வெளியிடக்கூடாது என உத்தரவு இட்டது