ஆந்திராவில் உடலுறுப்புகளை விற்பனை செய்யும் வடமாநிலத்தவர்களா பொய்யான செய்தி
அட்மின் மீடியா
0
கடந்த சில தினங்களாக வட மாநிலத்த்தை சார்ந்த கொள்ளையர்கள் குழந்தைகளை கடத்தி அவர்களின் உடல் உறுப்புக்களை சேகரித்து பணம் ஈட்டுகிறார்கள் எனவும் அத்துடன் சேர்த்து பார்ப்பதற்கே மிகவும் கொடூரமான உடல் உறுப்புகளை அடுக்கும் வீடியோவும் மிகவும் வைரலாக சமூக ஊடகங்களில் பல்ரும் ஷேர் செய்கின்றார்கள்.
இதன் உண்மை தன்மையை அட்மின் மீடியா களம் காண முயற்சி செய்தது. எங்களின் ஆய்வின் முடிவை தெரியப்படுத்துவதற்கு முன், அட்மின் மீடியா வாசகர்களுக்கு ஒரு விஷயத்தை தெரியப்படுத்த விரும்புகிறோம்.
எங்களின் இந்த பதிவின் நோக்கம் வைரலாக பரவும் பொய்யான இந்த வீடியோவை சார்ந்தது மட்டுமே. தவிர குழந்தை கடத்தலோ அல்லது உடல் பாகங்களை விற்பனை செய்யும் கொள்ளையர்களோ நம்மை சுற்றி இல்லை என்பது அல்ல.
வைரலாக பரவும் இந்த வீடியோ உண்மையில் ஆந்திராவில் நடந்த சம்பவம் தானா என்று ஆய்வு செய்ததில் முதல் ஆதாரமாக அந்த வீடியோவில் இடம்பெறும் கருப்பு ஆடை அணிந்தவர்களின் ஆடையில் எழுதி இருக்கும் 'Policia Civil' என்ற வார்த்தை சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இரண்டாவதாக அந்த வீடியோவில் இடம் பெற்றவர்கள் பேசிய மொழி 'Portuguese' எனவும் தெரியவருகிறது.
இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்து ஆய்வு செய்ததில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவர் மாதம் பிரிட்டன் சிறையில் இரண்டு கலககாரர்களிடம் ஏற்ப்பட்ட மோதலில் இறந்தவர்களின் உடல் உறுப்புக்கள் தான் என தெரியவந்தது.
இந்த வன்முறையில் பலர் சிறையை விட்டு தப்பித்தனர், மேலும் பலர் உடல் பாகம் சிதைந்து இறந்தும் போனார்கள்.
சிறை அதிகாரிகள் இறந்தவர்களின் உடல் உறுப்புக்களை சீர் செய்து அடையாளம் காண முயற்சி செய்யும் வீடியோவை தான், நாம் பொய்யான விஷம கருத்துக்களுடன் நம்மை அறியாமல் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என பரப்பும் வீடியோ.
இனியாவது இந்த வீடியோவை பரப்புவதை நிறுத்துவார்களா?
ஆதாரம்: 1
ஆதாரம் 2
ஆதாரம் 3
மக்கள் சேவையில் என்றும் அட்மின் மீடியா அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2019/03/blog-post_34.html
Tags: மறுப்பு செய்தி