ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ. 2 ஆயிரம்; குப்பையை வீசினால் ரூ. 500
அட்மின் மீடியா
0
ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
ரயில்களில் நின்று கொண்டும், ரயில் நிலையங்களில் ரயில் செல்லும் போதும் செல்பி எடுப்பதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சிலர் பாலங்களில் ரயில் செல்லும் போதும், ரயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் செல்பி எடுக்கின்றனர்.இதனால், அடிக்கடி பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதனால் ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகம், ரயில்வே நடைமேடை, ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்த பகுதிகளில் மீறி செல்பி எடுப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் ரயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை வீசி எறிபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதை கண்காணிக்க ரயில்வே நிர்வாகம் ஊழியர்களை நியமித்துள்ளது.
மீறி செல்பி எடுத்தால், குப்பை கொட்டினால் அந்த இடத்திலேய அபராதம் வசூலிக்கப்படும்