Breaking News

ஜார்கண்டில் முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை

அட்மின் மீடியா
0

ஜார்கண்டில் தப்ரெஸ் என்ற முஸ்லீம் இளைஞர், கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக தப்ரெஸ் தாக்கப்பட்டார். தாக்கும் போது, அந்த கும்பல் அவரை "ஜெய் ஸ்ரீ ராம்" என்று சொல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தாக்குதலுக்கு பின் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட தப்ரெஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தாக்குதல் பற்றி அவரது மனைவி என்னுடைய கணவன் ஜம்ஷேபுரில் இருந்து கிராமத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அப்போது கிராமத்தைச் சேர்ந்த சிலர் வந்து, அவரை சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.
வேண்டும் என்றே திருட்டுப் பழியை சுமத்தி இரவு முழுவதும் மின்சார கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து உதைத்திருக்கிறார்கள்.
ஜெய் ஸ்ரீராம் மற்றும் ஜெய் ஸ்ரீ ஹனுமான் என்று சொல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர் அப்படி சொல்ல மறுத்ததற்கு மோசமாக அடித்தார்கள். காலையானதும் அவரை சராய்கேலா போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கிறார்கள்
நான் எனது கணவரை தாக்கியவர்களை கைது செய்ய புகார் கொடுத்தும் அதனை கண்டு கொள்லாமல் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எதையுமே எடுக்காத போலீசார், எனது கணவரை திருடன் என்று முத்திரைக் குத்தி சிறைக்கு அனுப்பி விட்டார்கள். சிறை நிர்வாகமும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அவரை அப்படியே விட்டுவிட்டார்கள் எனது கனவரை கொண்றவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றார்
கண்களில் கண்ணீரை வர வைக்கும் தப்ரேஸ் அடிவாங்கிய வீடியோ

Give Us Your Feedback